100 குறள் சொல்லுங்க.. குடும்பத்தோடு 21 வகையான மெகா அசைவ விருந்தை உண்ணுங்க.. ப்ரீயா! News Article : One India Tamil
புதுச்சேரி: 100 திறக்குறள் ஒப்புவித்தால் குடும்பத்திற்கே பிரம்மாண்ட அசைவ விருந்து அளிக்கும் உணவகம். தமிழை வளர்க்கும் நோக்கில் புதுவிதமான முயற்சியை கையாண்டுள்ளது புதுச்சேரியில் உள்ள ஜல்லிக்கட்டு உணவகம்.
வாழ்வியல் நெறிகளை ஒன்றரை அடியில் விளக்கும் திருக்குறள் உலக பொது மறையாக விளங்குகிறது. திருக்குறளைப் பற்றி தமிழர்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் புகழ்ந்து பேசுகின்றனர்.
இவ்வாறு பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ள திருக்குறளை எழுதியது திருவள்ளுவர் என்ற தமிழர் என்பது நமக்கெல்லாம் பெருமை.
எங்கெங்கும் வள்ளுவர்
பொதுவாக திருக்குறள் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பேருந்துகள், அரசு கட்டிடங்கள், தனியார் கட்டிடங்களில் எழுதப்பட்டிருப்பதை நம்மால் காண முடியும். மேலும் பொது நிகழ்ச்சிகள் தொடங்கும் முன் திருக்குறள் வாசிக்கப்பட்டே தொடங்கும். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த திருக்குறளை தற்போது உள்ள பெரும்பாலான இளைய தலைமுறையினரும், மாணவர்களும் திருகுறளைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனை தரக்கூடிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
குறளின் புகழ் பரப்ப
திறக்குறளின் புகழை பரப்ப தமிழ் ஆர்வலர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் திருக்குறளை கொண்டு சேர்க்கும் புதுவிதமான முயற்சியில் இறங்கியுள்ளார் புதுச்சேரியைச் சேர்ந்த சமையற்கலை வல்லுநர் ஒருவர்.
நிருபன் ஞானபானு
புதுச்சேரி அருகே கரிக்கலாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயது இளைஞர் நிருபன் ஞானபானு. சமையற்கலை வல்லுநரான இவர், கடந்த 6 ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ள பிரபல உணவகங்களில் சமையற்கலை வல்லுநராக பணிபுரிந்துகொண்டு, நமது பாரம்பரிய உணவு வகைகளை அந்நாட்டில் பிரபலபடுத்தியுள்ளார். அதோடு நின்றுவிடாமல் தாய் மொழி தமிழ் மீது அதிக பற்றுகொண்ட நிருபன் ஞானபானு, உலக பொதுமறையாக விளங்கும் திருக்குறளின் புகழை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் புதுமையான முயற்சிதை கையாண்டுள்ளார்.
வித்தியாசமான உணவகம்
புதுச்சேரி அருகே நோணாங்கும் பகுதியில் இயற்கை எழில்சூழ, கீத்து கொட்டகை வடிவில் புதிதாக உணவகம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதில் என்ன சிறப்பு என்றால், இவரது உணவகத்திற்கும் வரும் யாராக இருந்தாலும் சரி, 100 திருக்குறளை ஒப்புவித்தால் போதும் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, காடை வறுவல், இறால் தொக்கு, நண்டு வறுவல், வஞ்சிரம் மீன் வறுவல் என 21 வகையான மெகா அசைய விருந்து இலவசமாக சாப்பிட்டுவிட்டு வரலாம்.
குறள் சொல்லுங்க
இதிலும் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்கள் திருக்குறளை ஒப்புவித்தால் தங்களது குடும்பத்தோடு இலவசமாக அசைவ விருந்தை சாப்பிட்டு மகிழலாம். நிருபன் ஞானபானுவின் இந்த புதுவிதமான முயற்சிக்கு புதுச்சேரியில் உள்ள தமிழரிஞர்களும், பொதுமக்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். வித்தியாசமான முயற்சிதான்.. ! Source : https://tamil.oneindia.com
Comments